Oct 13, 2022, 10:15 AM IST
மதுரை - புளியங்குடி சாலையில் வம்ச விருத்தி நகர் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து தென்காசி நோக்கி கட்டுபாட்டை இழந்து வேகமாக வந்துக்கொண்டிருந்த கார் ஒன்று காவலர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் தலைமை காவலர் சுந்தரய்யா, காவலர் மருதுபாண்டி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து அக்கம்பக்கதினர் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க:"சேலை தான் Modern Style"ஆளுநர் தமிழிசையின் கருத்துக்கு எம்.பி கனிமொழி பதிலடி.. என்ன சொன்னார் தெரியுமா..?
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புளியங்குடி போலீசார் கார் ஓட்டுநரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தலைமை காவலர் சுந்தரய்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது கார் மோதிய விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க:தமிழகத்தில் அக்.16 ஆம் தேதி வரை கனமழை தொடரும்.. சென்னையில் 2 நாட்களுக்கு மழை..