Jul 7, 2022, 4:40 PM IST
கோவை மாவட்டம், உக்கடம் பெரிய குளத்தின் கரையின் மீது நடைபயிற்சி பாதை, மிதிவண்டி பாதை, இருக்கை நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திறந்த வெளி அரங்கம் விளையாட்டு திடல், உணவுக்கூடங்கள், படகு துறை மிதவை உணவகம், குளத்திற்கு வரும் கழிவு நீரை சுத்தம் செய்ய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் ரூ.62.17 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
செல்வ சிந்தாமணி குளம் ரூ.31.47 கோடி மதிப்பீட்டிலும் வாலாங்குளம் குறுக்கே உள்ள சாலை பகுதி ரூ.24.31 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது. வாலாங்குளத்தின் கரையானது ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டது. செல்வம்பதி மற்றும் குமாரசாமி குளங்கள் ரூ.31.25 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது.
இக்குளங்களில் பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் உக்கடம் பெரியகுளத்தில் படகு சவாரி சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. மக்களின் கோரிக்கையை ஏற்று விரைவில் படகு சவாரி தொடங்கப்பட இருக்கிறது. இதையொட்டி, மிதிவண்டி படகுகள், துடுப்பு படகுகள், மோட்டார் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், படகு இல்லம் திறப்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.