தாறுமாறாக பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.. பொதுமக்களுக்கு அபாய எச்சரிக்கை..!

Aug 10, 2019, 2:20 PM IST

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா,கர்நாடகா மற்றும் தமிழகத்தின் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.  கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. குறிப்பாக கபினி அணையினுடைய நீர் பிடிப்பு பகுதிகளான வயநாடு பகுதியில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக பலத்த மழை பெய்து வருவதால் கபினி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால்  ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மேட்டூர் அணை கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குருப்பிடித்தக்கது