Jan 21, 2025, 6:46 PM IST
திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு மற்றும் இவரது மகனும் வேலூர் மக்களவை தொகுதி உறுப்பினருமான கதிர் ஆனந்த் நடத்தி வரும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட 4 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஜனவரி 3ம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், வேலூர் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது. திமுக எம்.பி. கதிர் ஆனந்த் வீடு மற்றும் கிங்ஸ்டன் கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில் ரூ.13.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.