Jan 24, 2025, 6:58 PM IST
அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் பெரியார் இல்லாவிட்டால் இன்னும் நான் கோவணம் கட்டி ஏர் ஒட்டிக்கொண்டு தான் இருந்திருப்பேன். நம்மைப் பற்றி நமக்கு புரிய வைத்தவர் தந்தை பெரியார். அதற்காக அவர் பட்ட அவமானங்கள், எதிர்மறைகள் அதிகம். சேற்றை வாரி இறைத்தனர். இறைத்து கொண்டும் இருக்கிறார்கள் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. பெரியாரிடம் போய் கேட்டார்கள் 'ஏன் சிலர் இப்படி செய்கிறார்கள்' என்று, 'இன்னும் அவர்கள் பழைய ஆட்களாக இருக்கிறார்கள் இன்னும் திருந்தவில்லை. வருவார்கள்' என்று சொல்லிவிட்டார்'' என்றார்.