Nov 5, 2019, 4:11 PM IST
ஆவடி அடுத்த பட்டாபிராம் நவஜீவன் நகரை சேர்ந்தவர் தாஸ் இவரது மகன் அப்பு/24 தனியார் கம்பனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் இவரது உறவினரான பட்டாபிராம் காந்திநகரை சேர்ந்த ஸ்டெப்பி என்கின்ற மெர்சிக்கும் ஜனவரி மாதம் திருமணம் நடத்த முடிவு செய்து கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இருவரும் அடிக்கடி தனியாக ஊர் சுற்றி வந்துள்ளனர்.
அந்த வகையில் இருவரும் சென்னை வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி சாலை சந்திப்பது வழக்கம்.அது போல் இன்று 400 அடி சாலையில் அப்புவும், மெர்சியும் இரு சக்கர வாகனத்தில் சென்று அப்போது முத்தாபுதுப்பேட்டை அருகே காண்டிகை கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றின் அருகே அமர்ந்து செல்பி எடுத்துள்ளனர்.அப்போது கால் தவறி மெர்சி கிணற்று குள் விழுந்துள்ளார்.அவரை பிடிக்க சென்ற போது அப்புவும் கிணற்றில் விழுந்துள்ளார்.
கிணற்றில் இருந்து இருவரது அலறல் சத்தம் கேட்டு அருகே வயல்வெளியில் வேலை செய்து கொண்டு இருந்த சடகோபன் என்பவர் அப்புவை காப்பற்றி பொது மக்கள் உதவியுடன் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர் .அதற்குள் மெர்சி தண்ணீரில் மூழ்கினார்.பின்னர் இது குறித்து ஆவடி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராகவர் தலைமையில் வந்த மீட்பு படையினர் சுமார் 1 மணி நேரம் போராடி இறந்த உடலை மீட்டனர். சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இருவருக்குதிருமணமாக உள்ள நிலையில் மணமகள் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.