மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இடிந்து விழுந்த கட்டிட மேற்கூரை.. அலறி அடித்து ஓடிய அதிகாரிகள்..

Sep 26, 2022, 5:16 PM IST

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் அரசு துறையின்  பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.  இங்கு பிரதான கட்டிடம் தவிர்த்து பழமை வாய்ந்த கட்டிடங்களும் உள்ளன . 

இந்நிலையில் இன்று மகளிர் திட்டம் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவகம் செயல்பட்டு வரும் பழமையான கட்டிடத்தில் உள்ள ஒரு அறையின் மேல் பகுதி திடீரென பெயர்ந்து விழுந்தது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை. 

மேலும் படிக்க:மழைநீர் தேங்காது என மெத்தனமாக இருக்க வேண்டாம்..! அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்

பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் மேல் கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பழமைவாய்ந்த இந்த கட்டிடம் ஆங்கிலேயர் ஆட்சியில் காலத்தில் கட்டப்பட்டது. இதன் மேல் தளத்தில் மகளிர் திட்ட அலுவலகமும்  கீழ்பகுதியில் புவியியல் சுங்கத்துறை துணை இயக்குனர் அலுவலகம் உள்பட 5க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. 

மேலும் படிக்க:சென்னையில் வாட்டி வதைத்த வெயில்… திடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த மக்கள்!!

இந்நிலையில் இன்று மகளிர் திட்டம் அலுவலகத்தின் அருகே உள்ள அறையின் மேல் தளத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மேற்பகுதி இடிந்து விழுந்த அறை பயன்படுத்தாமல் பூட்டி வைக்கப்பட்டிருந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை. 

இதனையடுத்து அங்கு செயல்பட்டு வந்த அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு , சம்பந்தப்பட்ட கட்டிடத்தில் இருந்த அனைத்து அலுவலகங்களும் பூட்டப்பட்டு, இந்த பகுதிக்கு யாரும் செல்ல கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.