Oct 11, 2023, 5:49 PM IST
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகள் உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கோத்தகிரி நகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் இரவு நேரத்தில் கருஞ்சிறுத்தை உலா வந்துள்ளது.
சுற்றுச்சுவரை தாண்டி குதித்து உள்ளே வந்த கருஞ்சிறுத்தை வீட்டின் வெளியே கார் நிறுத்தத்தில் கூண்டில் இருந்த வளர்ப்பு நாய்யை வேட்டையாட முயற்சி செய்து தோல்வியடைந்து திரும்பி சென்றது.
இந்த காட்சி குடியிருப்பு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது குடியிருப்பு வாசிகளை அச்சமடைய செய்துள்ளது. எனவே வனத்துறையினர் உடனே குடியிருப்பு பகுதியில் உலா வரும் கருஞ்சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.