உண்டியலில் விழுந்த செல்போன்; ரூ.10,000 கட்டிய பின்னர் உரிமையாளரிடம் கொடுத்த அறநிலையத்துறை!

Jan 9, 2025, 12:51 PM IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூரில் மிகவும் பிரசித்த பெற்ற கந்தசாமி கோவில் உள்ளது. இந்த கோயிலின் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அப்போது பண முடிப்பு, சில்லறை நாணயங்கள், 500 ரூபாய் நோட்டுக்கள் தாலி, கண்மலர், வேல் ,தங்கம் மற்றும் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அப்போது உண்டியலில் விலை உயர்ந்த ஐபோன் ஒன்று இருந்துள்ளது. இதனையடுத்து அந்த போன் யாருடையது என விசாரித்த நிலையில் சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவரது தெரியவந்தது. முதலில் செல்போனை கொடுக்க அறநிலையத்துறை மறுத்த நிலையில் தற்போது 10ஆயிரம் ரூபாய் செலுத்திய பிறகு செல்போன் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.