Aug 22, 2024, 12:46 PM IST
சென்னை தலைமைச் செயலகத்தில் 200 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இந்நிலையில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் கிராமங்களுக்குச் செல்ல அணிவகுத்து தயாராக இருப்பதை காணலாம். தேவையான வசதிகளுடன் கூடிய இந்த வேன்கள் மாநிலத்தின் ஒவ்வொரு பட்டி தொட்டிகளில் கால்நடை சேவைகளை வழங்க உள்ளது. இது தொடர்பான வீடியோவை சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு ஐஏஎஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.