Oct 27, 2023, 3:10 PM IST
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் இன்று முகநூலில் காவல்துறை அதிகாரிகளுக்கு எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வீடியோ ஒன்றை பதிவு செய்து பரவச் செய்துள்ளார். அந்த வீடியோவில் தானும், தனது மகனும் ஆலங்காயம் பகுக்கு சென்று விட்டு திரும்பவும் திருப்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது தங்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தக் கூடவில்லை.
ஆனால் குருசிலாப்பட்டு காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் தன்னுடைய வண்டிக்கு அபராதமாக ஆயிரம் ரூபாய் விதித்துள்ளதாகவும், மேலும் இதேபோல் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்கு அபராதம் விதித்துள்ளனர் எனவும் ஆதங்கம் தெரிவித்தார்.
மேலும் தான் பத்து மாதங்களுக்கு முன்பு விபத்தில் காலை இழந்து உள்ளேன். நாங்கள் ஒரு நாளைக்கு 200 அல்லது 300 தான் சம்பாதிக்கின்றோம். இப்படி ஆயிரம் ரூபாய் அபராதம் போட்டால் நாங்கள் என்ன செய்வோம்? போலீஸாருக்கு மனசாட்சி என்பதே இல்லையா? இதனை உயர் அதிகாரிகள் கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து முகநூலில் வீடியோவை பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.