Oct 26, 2022, 2:13 PM IST
திருச்சி TVS டோல்கேட் அருகில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில், பருவ கால பேரிடர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, காய்ச்சல் முகாம்கள் மற்றும் பொது சுகாதாரப் பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில், நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியினை அமைச்சர்கள் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்
இதனை தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை. மேலும் மருத்துவ துறையில் 4307 காலி பணியிடங்கள் என கண்டறியப்பட்டு செவிலியர்களை நியமனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். இரண்டே மாதாத்தில் காலியான உள்ள செவிலியர்கள் பணி நிரப்பப்படும் என்றார்.