திருச்சியில் சிலிண்டர் வெடித்து தீயணைப்புத்துறை வீரர் காயம்!!

Nov 1, 2022, 11:50 AM IST

திருச்சி நீதிமன்ற வளாகம் அருகில் உள்ள தீயணைப்பு துறை அலுவலகத்தில் சிலிண்டர் வெடித்து தீயணைப்புத்துறை வீரர் ஒருவர் காயமடைந்தார். அவசர சிகிச்சைக்காக அவரை திருச்சி அரசு மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு தீயணைப்பு துறை வாகனத்தின் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.