Oct 10, 2022, 10:10 PM IST
திருச்சி, மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. 349.98 கோடி ரூபாய் செலவில் முனையம் அமையவுள்ள நிலையில், அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் நேரு தலைமை தாங்கி விழாவை நடத்தினார்.
இந்நிலையில் அமைச்சரின் கூட்டத்தில் திடீரென பாம்பு ஒன்று புகுந்தது. பாம்பை கண்டு கட்சியினர் பதறிய நிலையில், தொண்டர் ஒருவர் மட்டும் பதற்றமடையாமல் அந்த பாம்பை காலால் மிதித்தே கொலை செய்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.