Oct 26, 2022, 10:56 AM IST
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் முக்கிய நிகழ்வான கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று அதிகாலை முதலே கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அபிஷேகம் தீபாராதனை நடைபெற்று பின்னர் காலை 5.30 மணிக்கு யாக சாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதனையடுத்து கந்த சஷ்டி விழா தொடங்கிய நிலையில் தமிழகம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து குறிப்பாக மலேசியா ஜப்பான் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து பக்தர்கள் கந்த சஷ்டி விரதம் இருந்து பச்சை ஆடை அணிந்து முருகப்பெருமானின் பாடல்களை பாடியும் விரதம் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆறு மாத காலமாக தங்க தேர் பவனி தடை செய்யப்பட்ட நிலையில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆணைக்கு இணங்க அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் நேரில் வந்து தங்க தேரை ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று இரவு தங்க தேர் பவனியில் உலா வந்து பக்தர்களுக்கு சுவாமியும் ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் கோவில் வெளிப்பிரகாரத்தில் நான்கு ரத வீதியும் சுற்றி வந்தனர் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் தங்கத்தேர் முன்பு பெண்கள் மடியேந்தி சாமியிடம் குழந்தை வரம் திருமணம் நடைபெறுவதற்காக வேண்டி வருகிறார்கள்
தங்கத்தேரில் சுவாமியும் அம்பாளும் காட்சியளித்தனர் இதனை கண்ட பக்தர்கள் மிகுந்த மன மகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகின்ற 30 ம் தேதி நடைபெறுகிறது. திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை கோவில் அறங்காவல் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கோவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் திருவிழாவை சிறப்பாக செய்து வருகிறார்கள்