Sep 18, 2019, 12:26 PM IST
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவரும், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த நீலாம்பரி என்பவரும் காதலித்து வந்துள்ளனர் .இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த காதல் ஜோடி நேற்று போளுர் சப்தகிரி மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளனர். அதிர்ஷ்டவசமாக பாறைகளின் சிக்கி சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பெரும் பாப்பரப்பை ஏற்ப்படுத்தியது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.