நீலகிரியில் வாகனங்களை நிறுத்தி யானைகளுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்த வனத்துறையினர்

Dec 23, 2023, 10:32 AM IST

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் வனப்பகுதிகள் பசுமை நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த பத்து நாட்கள் முன்பு குட்டியுடன் கூடிய 10 காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு வந்தது.

அங்கும், இங்கும் சுற்றி திரிந்த காட்டு யானை கூட்டத்தை குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது கே என் ஆர் பகுதியில் யானைகள் சாலையை கடந்து சென்றன. யானைகளுக்கு உதவுவதற்காக வனத்துறையினர் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி காட்டு யானைகள் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர்.