Jan 5, 2024, 10:18 AM IST
ஜேஎன் 1 வகை கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. பேருந்து, தனியார் வாகனங்களில் வரும் பயணிகள் அனைவரும் தெர்மல் ஸ்கேன் கருவிகள் மூலம் பரிசோதனை செய்த பின் நீலகிரி மாவட்டத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் எங்கு செல்கிறார்கள் என்ற குறிப்பும் எடுக்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்படாத வகையில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா உத்தரவின் பேரில் கேரளா, கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.