Jun 30, 2023, 1:38 PM IST
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் அருகே உள்ள சூரங்குடி பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர். தனியார் மருத்துவமனையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தலித் சமூக பெண் பணியாற்றி வந்துள்ளார். மருத்துவமனை நிர்வாகம் திடீரென அப்பெண் மீது ரூ 40 இலட்சம் பணத்தை திருடியதாக புகார் அளித்து, காலை 11 மணி முதல் சட்டவிரோதமாக மருத்துவமனையில் வைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் மருத்துவர்கள் பெண்ணின் நகை மற்றும் கைப் பேசியை பறித்துக் கொண்டு 40 இலட்சம் திருடியதாக பேப்பர் ஒன்றில் எழுதி அதில் கையெழுத்து போடச் சொல்லி இரவு 10.30 மணி வரை மிரட்டியுள்ளதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக, வழக்கறிஞர் ஐயப்பன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைசெயலாளர் தொல்காப்பியன் ஆகியோர், துரிதமாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட காவல்துறைக்கும் மற்றும் உளவுத்துறைக்கும் தகவல் கொடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டனர்