Aug 8, 2019, 6:16 PM IST
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மிக சிறப்பு வாய்ந்த நிகழ்வான அத்தி வரதர் வைபவம் ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெறும். அந்த வகையில் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சயன கோலத்தில் காட்சி அளித்து இருந்தார் அத்திவரதர். பின்னர் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 17ஆம் தேதி வரை சிலையின் உறுதி தன்மையை பொருத்து நின்ற கோலத்தில் அத்தி வரதரை தரிசனத்திற்காக வைத்துள்ளனர்இதனை தொடர்ந்து அத்தி வரதர் தரிசனம் செய்வதற்கான அவகாசம் வரும் 16ஆம் தேதி இரவு உடன் நிறைவு பெறுகிறது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அதிரடியாக பேட்டி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் நின்ற கோலத்தில் அத்தி வரதரை காண்பதற்காக பக்தர்கள் தினம் தினம் லட்சக்கணக்கில் வருகை புரிகின்றனர். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு மூன்று லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அத்திவரதரை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்த பக்தர்களுக்கு அப்பகுதி மக்கள் மாடியில் இருந்து தண்ணீர் வழங்கி பக்தர்களின் தாகத்தை தீர்த்து உள்ளனர் இதனை தொடர்ந்து தரிசிக்க வருபவர்களிடம் காசு வாங்கி அத்திவரதரை தரிசிக்க இடையில் விடுவதக்காக பக்தர்களுக்கும் அங்கே உள்ள கோவில் ஊழியருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது
காஞ்சிபுரத்தில் சுமார் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தின் பல்வேறு மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கோவையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் வெள்ளிங்கிரி (50) பாதுகாப்பு பணிக்காக காஞ்சிபுரம் வந்து இருந்தார். அவர் பணி முடிந்து வாலாஜாபாத்தில் தங்கி இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வெள்ளிங்கிரி பரிதாபமாக உயிரிழந்தார். பாதுகாப்பு பணிக்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.