Aug 10, 2019, 1:15 PM IST
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மிக சிறப்பு வாய்ந்த நிகழ்வான அத்தி வரதர் வைபவம் ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெறும். அந்த வகையில் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சயன கோலத்தில் காட்சி அளித்து இருந்தார் அத்திவரதர். பின்னர் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 17ஆம் தேதி வரை சிலையின் உறுதி தன்மையை பொருத்து நின்ற கோலத்தில் அத்தி வரதரை தரிசனத்திற்காக வைத்துள்ளனர் இதனை தொடர்ந்து அத்தி வரதர் தரிசனம் செய்வதற்கான முக்கிய பிரமுகர்கள் வரும் வரிசையில் உரிய பாஸ் இல்லாமல் அனுமதித்த காவல் ஆய்வாளரை மாவட்ட ஆட்சியர் அனைவர் முன்னிலையிலும் கண்டித்ததோடு உன்னை சஸ்பெண்ட் செய்தால்தான் வலிக்கு வருவாய் என்றும் சரமாரியாக திட்டிய வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது