Jun 14, 2023, 12:13 PM IST
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி காளியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாரத் குமார் (வயது 27) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அஜித்(வயது 28) ஆகிய இருவரும் சேர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்து அத்து மீறியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, சிறுமியின் பெற்றோர் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, பாரத் குமார் மற்றும் அஜித் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டபிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த பழனி அனைத்து மகளிர் போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி கருணாநிதி தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட பாரத்குமார் மற்றும் அஜித் ஆகியோருக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். தீர்ப்பைத் தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.