VIDEO | கொடைக்கானலில் வாகனம் மோதி காயமடைந்த ஆந்தைக்கு சிகிச்சை!

Jun 20, 2023, 6:10 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் 60சதவிகிதம் வனப்பகுதியாக உள்ளது, இந்த மலைப்பகுதியில் அரிய வகை பறவை இனங்களும், வன விலங்குகளும் ஏராளமானவை வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் நாயுடுபுரம் அருகே வில்பட்டி, பள்ளங்கி கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலையில் காலை வேளையில் இந்தியன் ஈகிள் என்னும் ஆந்தை ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மீது மோதி காயம் ஏற்பட்டு சாலையில் துடி துடித்து கிடந்தது. இதனை பார்த்த இப்பகுதி மக்கள் வனத்துறையினறுக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அடிப்படையில் வந்த வனத்துறை ஆந்தையை மீட்டு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

இந்த ஆந்தை ராக் எனும் அபூர்வ வகை சேர்ந்ததாகவும். இதன் நீளம் சுமார் 6 மீட்டர் நீளம் கொண்டவை என்றும் இது வனப்பகுதியில் உள்ள மலை முகடுகளின் இடையினையில் வாழ்பவை என்றும் வனப்பகுதியை விட்டு வெளியேறி வாகனத்தின் மீது மோதி காயம் ஏற்பட்டதாக வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.