Jun 19, 2023, 9:39 AM IST
திண்டுக்கல் மாவட்டம் ஏரியோட்டில் இருந்து வேடசந்தூர் செல்லும் சாலையில் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் பழைய இரும்பு கம்பி வேலியை கயிறு மூலம் கட்டி நடுரோட்டில் தர தர வென புழுதி பறக்க இழுத்துச் சென்றார்.
இதனைக் கண்ட அவ்வளியே சென்ற மற்றொரு வாகன ஓட்டி அவரிடம் பேச்சு கொடுத்தவாரே வீடியோ எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். அப்போது அவரிடம் இந்த இரும்பு வேலியை எங்கிருந்து எதற்கு கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அதற்கு அவர் பூத்தாம்பட்டியில் இருந்து வேடசந்தூர் கொண்டு செல்வதாகவும், எதற்காக கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்கும் போது மது வாங்குவதற்காக கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளார். ஒரு பாட்டிலின் விலை 140 ரூபாய் என்றும் இந்த இரும்பு கம்பியானது 160 ரூபாய்க்கு பழைய இரும்பு கடையில் வாங்குவார்கள் என்றும். சிரித்தவாறு பதிலளித்தார்.
மேலும் மது பிரியர் செய்த செயல் பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில் இரும்பு வேலியுடன் அட்ராசிட்டி செய்த அந்த நபரால் பிற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அவரை கடந்து சென்றனர்.