தீபாவளி எதிரொலி.! கோவை பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்!!

Oct 21, 2022, 10:32 PM IST

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக, கோவையில் இருந்து, 240 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.இதை முன்னிட்டு, கோவை மண்டல போக்குவரத்துக் கழகம் சிறப்பு பஸ்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, பல்வேறு பகுதிகளுக்கும், 240 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதிக்காக, கடந்தாண்டுகளை போல இந்தாண்டும், நான்கு பஸ் ஸ்டாண்டுகளில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மதுரை, தேனி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு, சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட், கரூர், திருச்சி வழியாக செல்லும் பஸ்கள், சூலுார் பஸ் ஸ்டாண்ட், சேலம், திருப்பூர், ஈரோடு, ஆனைகட்டி, வழியாக செல்லும் பஸ்கள், காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்ட், ஊட்டி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கமலம் வழியாக செல்லும் பஸ்கள், மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புதிய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு பஸ்கள், இன்று முதல் 23ம் தேதி வரை இயக்கப்பட உள்ளன. கோவை - மதுரைக்கு, 100, கோவை - தேனிக்கு, 40, கோவை - திருச்சி, சேலத்துக்கு தலா, 50, என, மொத்தம், 240 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகள் கூறுகையில், 'கடந்த முறை கொடிசியாவில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.  மழையின் காரணமாக பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இதைக்கருத்தில் கொண்டு, சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் பஸ் ஸ்டாண்ட்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்த பஸ் ஸ்டாண்ட்களுக்கு தேவையான டவுன் பஸ்களை, கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.

இதையும் படிங்க..குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..! 2 நாட்களுக்கு டாஸ்மாக் கிடையாது - அதிரடி உத்தரவு!