Dec 14, 2022, 3:24 PM IST
கோவையில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்ற இரு சக்கர வாகன பிரச்சார பயணத்தை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆணையாளர் பாலகிருஷ்ணன், பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோவையில் இருந்து காத்மண்டு வரை இரு சக்கர வாகன விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கின்றனர்.
கோவை மாநகரை பொறுத்தவரை சைபர் குற்றங்களை , குற்கங்கள் நடக்கும் முன் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தபடுகின்றது சைபர் குற்றம் நடந்த பின் பணத்தை மீட்பதில் சிக்கல் இருக்கின்றது. இது போன்ற குற்றங்கள் பல ஆயிரம் கி.மீ தொலைவில் இருந்து அல்லது வேறு நாடுகளில். இருந்து சைபர் குற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றது
கோவை மாநகர சைபர் கிரைம் விங் இது தொடர்பான குற்றவாளிகளை கைது செய்து வருகின்றது.
பண இழப்பை தடுத்து வருகின்றோம் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.