Watch : கோவை அருகே அமையும் தொழிற்பேட்டையால் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு!- அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி!

Dec 22, 2022, 12:45 PM IST

கோவை மாவட்டம், கிட்டாம்பாளையத்தில், 316.04 ஏக்கர் பரப்பளவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டை அமைய உள்ளது. இதற்கான அடிக்கல்லை தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நட்டு வைத்தார்.

கடந்த 30.8.2021 ம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அரசின் பங்களிப்பாக ரூ10 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து, பயனாளிகள் பங்களிப்பு ரூ14 கோடியே, 60 லட்சம் சேர்த்து, ரூ24.61 கோடி மதிப்பீட்டில் தொழிற்பேட்டைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளான சாலைகள், தண்ணீர் குழாய்கள் பதித்தல், மேல்நிலைத்தண்ணீர் தொட்டிகள், ஆழ்துளை கிணறுகள் மற்றும் நிர்வாக அலுவலகம் அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகள. செயல்படுத்தப்பட உள்ளன.

இந்த விழாவில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு பேசினார், அப்போது, நேரடியாக இங்கு 15,000 பேருக்கும், மறைமுகமாக 30000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார். இதில், தொழில் மனைகள் 585 அமைய உள்ளது. ஆசியாவிலேயே சிறந்த தொழில்பேட்டையாக இந்த தொழில்பேட்டை உருவெடுக்கும் என்றார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பரசன், இந்த தொழிற்பேட்டை மூலம் நேரடியாக 15,000 பேருக்கும், மறைமுகமாக 30,000 பேருக்கும் என மொத்தம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறினார்.