Sep 4, 2019, 1:53 PM IST
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த ௨ ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு தெருக்களிலும், சாலைகளிலும் பிரமாண்ட அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர்.
இப்படி வழிபடப்படும் விநாயகர் சிலருக்கு, 3வது நாள் அன்று, ஆட்டம், பாட்டம், மேல தாளம் முழங்க உற்சாகத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆறுகள், குளங்கள், மற்றும் கடலில் கரைக்க படுவது வழக்கம். அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு பெறும் நாளான இன்று. மெரினா கடற்கரையில் சிறிய விநாயகர் சீலர்கள் முதல் பெரிய விநாயகர் சிலை வரை ஊர்வலமாக கொண்டு வந்து பக்தர்கள் கரைத்தனர்.
பக்தர்களின் விநாயகர் ஊர்வலத்தால், நகரில் பல்வேறு பகுதிகளில் போக்கு வரத்து நெரிசலும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.