Nov 4, 2023, 9:55 PM IST
நடிகர் சங்கத்தின் துணை நடிகராக இருந்தவர் ஈட்டி கோவிந்தன். இவருக்கு வயது 78. இவர் திருமணமாகாதவர். குடும்பம் யாரும் இங்கு இல்லை. இவர் கடந்த 23ம் தேதி வடபழனி பஸ்டாண்ட் அருகே மயங்கி விழுந்திருக்கிறார். இவரை சிலர் கே.எம்.சி ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்கள். அங்கு கடந்த 28ம் தேதி இறந்துள்ளார். அவர் இறந்த தகவல் இப்போது தான் நடிகர் சங்கத்துக்கு தெரியவந்தது.
அவரது ஈம சடங்கு செலவு மொத்தமும் நடிகர் சங்கமே ஏற்றுக் கொண்டு நடத்தியது. வடபழனி ஏவிஎம் சுடுகாட்டில் நடந்த இறுதி சடங்கில், நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் கலந்து கொண்டு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார். நடிகர் சங்கமும் இவரது இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளது.