பாளையங்கோட்டையில் தசரா திருவிழா கோலாகலம்; 12 சப்பரங்கள் அணிவகுப்பு

Oct 6, 2022, 3:02 PM IST

தமிழகத்தில் தசரா திருவிழா குலசேகரபட்டினம் முத்தாரம்மன் ஆலயத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். முத்தாரம்மன் கோவிலுக்கு அடுத்ததாக திருநெல்வேலி  மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் 12 சப்பரங்களுடன் மகிஷசம்ஹாரம் நடைபெறுவது வழக்கம் . இந்த ஆண்டு தசரா விழா கடந்த 25ம் தேதி பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோயிலில் கொடி ஏற்றத்துடன் தொடங்கி 10 தினங்கள் நடைபெற்றது. 

லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சூரனை வதம் செய்த முத்தாரம்மன

தொடர்ந்து பாளையில் உள்ள  தூத்துவாரி அம்மன், வடக்கு, தெற்குமுத்தாரம்மன், யாதவர் உச்சினிமாகாளி, கிழக்கு உச்சினிமாகாளி, வடக்கு உச்சினி மாகாளி, விஸ்வகர்மா உச்சினிமாகாளி, புதுப்பேட்டை உலகம்மன், புது உலகம்மன், வண்ணார் பேட்டை பேராத்து செல்வி அம்மன்  கோயில்களில் அம்மன் கோயில்களில் தசரா பண்டிகை தொடங்கியது.  

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி உற்சவம்; 108 வீணை இசை வழிபாடு

தினமும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் கொலு வீற்றிருக்கும் வைபவம் நடைபெற்று வந்தது. 10ம் திருநாளான விஜயதசமியையொட்டி நேற்று இரவு பாளை பகுதியில் உள்ள அம்மன் கோயில்கள், வண்ணார பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில்களிலிருந்து மின்னொளியில் 12 சப்பரங்கள் நள்ளிரவு 8 ரதவீதிகளில் வலம் வந்தன. இன்று காலையில்  ராமசாமி கோயில் திடலில்  அம்மன் சப்பரங்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தா்கள் தங்கள் நோ்த்திக்கடனை நிறவேற்ற தேங்காய்கள் உடைத்தும், புடவை பழ வகைகள் சமா்பித்ததும்  தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினா். இன்று  நள்ளிரவில்  மாரியம்மன் கோவில் திடலில் மகிஷசம்ஹாரம் நடைபெறுகின்றது.