script type="application/ld+json"> { "@context": "https://schema.org", "@type": "WebSite", "name": "Asianet News Tamil", "url": "https://tamil.asianetnews.com", "potentialAction": { "@type": "SearchAction", "target": "https://tamil.asianetnews.com/search?topic={search_term_string}", "query-input": "required name=search_term_string" } }

தேசிய நெடுஞ்சாலையில் ஈமச்சடங்கு செய்த கிராம மக்கள்! அதிகாரிகள் அதிர்ச்சி!

Feb 27, 2023, 1:48 PM IST

புதுச்சேரி அடுத்த திருபுவனை தொகுதி திருவெண்டார் கோவில் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கென இறந்தவர்களின் நினைவாக ஈம காரியங்கள் தர்ப்பணம் உள்ளிட்ட கரும காரியங்கள் செய்ய அப்பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள அரச மரத்தடியில் செய்து வந்தனர்.

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறையினர், விழுப்புரம்- நாகப்பட்டினம் நான்கு வழி சாலைக்காக நில ஆர்ஜிதம் செய்யப்பட்டு சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் உள்ள மரங்கள் கட்டிடங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. இதனால், திருவண்டார்கோவில் பெரிய பேட், சின்ன பேட், புதுநகர், வாய்க்கால் மேட்டு தெரு, உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர்களுக்கு அப்பகுதியில் ஈமச்சடங்குகள் செய்திட இடமில்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அப்பகுதியில் இறந்தவர் ஒருவருக்கு ஈமச்சடங்குகள் செய்திட தேசிய நெடுஞ்சாலை நடுவில் பந்தல் அமைத்து ஈமக்கிரிய காரியங்களை செய்து திருச்சி அரசுக்கு தங்களை எதிர்ப்பை தெரிவித்தனர்.

திருபுவனை அருகே முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும், ஈம காரியங்கள் செய்யவும் இடம் வழங்காத அரசைக் கண்டித்து, குறிப்பிட்ட சமூக மக்கள் சாலையின் நடுவே பந்தல் விரித்து ஈமச்சடங்கு செய்தனர். pic.twitter.com/SqTbVsD1c3

— Asianetnews Tamil (@AsianetNewsTM)


ஈம காரிய நிகழ்ச்சிகள் செய்திட இடம் ஒதுக்கி தர வேண்டுமென அரசிடம் கோரிக்கை வைத்தும் எந்தப் பலனும் இல்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென ஊர் பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.