script type="application/ld+json"> { "@context": "https://schema.org", "@type": "WebSite", "name": "Asianet News Tamil", "url": "https://tamil.asianetnews.com", "potentialAction": { "@type": "SearchAction", "target": "https://tamil.asianetnews.com/search?topic={search_term_string}", "query-input": "required name=search_term_string" } }

WATCH : Mr & Mrs. புதுச்சேரி பேஷன் ஷோ! கலர் கலர் ஆடைகளில் ஒய்யார நடைபயின்ற அழகிகள்!

Jun 12, 2023, 1:23 PM IST

பாண்டிச்சேரி பாடி பில்டர்ஸ் அசோசியேசன் சார்பில் முதல்முறையாக மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் பாண்டிச்சேரி 2023 நிகழ்ச்சி கடற்கரை காந்தி திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 150-க்கும் ஆணழகன்கள் கலந்து கொண்டு தனது கட்டுடலை காட்டி பார்வையாளர்களை பரவசப்படுத்தினார்கள்.

இதேபோன்று நடைபெற்ற மிஸ்ஸஸ் பாண்டிச்சேரி 2023 நிகழ்ச்சியில், 20-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சேர்ந்த மாடல் அழகிகள் கலந்து கொண்டனர். இவர்கள் வண்ண ஆடைகள் அணிந்து ஒய்யார நடை நடந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினார்கள்.

இதில் ஆடை அலங்காரம், உடல் அழகு, மற்றும் தனித்திறமை என இரண்டு சுற்றுகளாக நடத்தப்பட்ட மிஸ்ஸஸ் பாண்டிச்சேரி போட்டியில், மிஸ்ஸஸ் பாண்டிச்சேரியாக புதுச்சேரியை சேர்ந்த 'சோனாலி' என்ற அழகி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு விருதுகளும் கிரீடமும் சூட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நேரு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பரிசுகளை வழங்கினார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியை புதுச்சேரி கடற்கரையில் குவிந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்