script type="application/ld+json"> { "@context": "https://schema.org", "@type": "WebSite", "name": "Asianet News Tamil", "url": "https://tamil.asianetnews.com", "potentialAction": { "@type": "SearchAction", "target": "https://tamil.asianetnews.com/search?topic={search_term_string}", "query-input": "required name=search_term_string" } }

சாப்பிட்ட சம்சாவிற்கு காசு கேட்ட ஹோட்டல் ஊழியர்.. சரமாரியாக தாக்கிய இளைஞரால் பரபரப்பு - வெளியான வீடியோ!

Jan 1, 2024, 10:27 PM IST

புதுச்சேரியில் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற தகராறு ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் உள்ள ஒரு ஹோட்டலில் இளைஞர்கள் சிலர் குழுவாக அமர்ந்து தின்பண்டங்களை வாங்கி உண்டுள்ளனர். அப்பொழுது அவர்கள் சாப்பிட்ட சமோசாவிற்கு அந்த ஹோட்டலில் வேலை செய்து வரும் ஊழியர் ஒருவர் காசு கேட்டதாகவும், அதில் வாக்குவாதம் ஏற்பட்டு அங்கு இருந்த இளைஞர்களில் ஒருவர் அந்த ஹோட்டல் ஊழியரை சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. 

வெளியான அந்த சிசிடிவி காட்சிகளில் ஹோட்டல் ஊழியர் ஒருவர் சில இளைஞர்கள் மத்தியில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது திடீரென்று அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞர் கண்மூடித்தனமாக அந்த ஹோட்டல் ஊழியரை தாக்கத் துவங்குகிறார். அவர்களை விலக்கிவிடுவதற்காக ஒரு பெண் மற்றும் அந்த கடையின் மற்றொரு ஊழியர் ஓடிவரும் நிலையில், அந்த மற்றொரு ஊழியரையும் அந்த இளைஞர் கடுமையாக தாக்குகிறார். இறுதியில் அவருடைய நண்பர்கள் அவரை அங்கிருந்து வெளியே இழுத்து செல்லும் காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கின்றது.