Nov 25, 2019, 5:36 PM IST
மேற்குவங்க மாநிலம் நடியா மாவட்ட கரிம்பூர் தொகுதி இடைத்தேர்தல் நடந்துகொண்டிருந்த இடத்திற்க்கு பா.ஜ.க வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் மஜும்தார் வந்தபோது அவரது காரை வழிமறித்து திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் புதருக்குள் தள்ளி அடித்து உதைத்தனர்.
அப்பொழுது அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் வந்து ஜெயப்பிரகாஷை மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். பா.ஜ.க வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் வேண்டுமென்றே தேர்தல் நடக்கும் இடத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றார் என்று திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனை குறித்து பா.ஜ.க வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் கூறுகையில், இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என பயந்து ஆளும் திரிணாமூல் தொண்டர்கள் என்னைத் தாக்கினர். இதுகுறித்து நான் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துவிட்டேன்” என்றார்..!