Jan 16, 2025, 9:00 PM IST
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், அவரது மகன் இன்பநிதியும் கண்டுகளித்து வருகிறார்கள். போட்டி தொடங்கி வைக்கும் முன்பு, உதயநிதி, இன்பநிதிக்கு அமைச்சர் மூர்த்தி, அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான லோகோவுடன் உடன் கூடிய அடையாள அட்டையை வழங்கினார். அதனை உதயநிதி தனது சட்டையில் இணைத்துக் கொண்டார். அப்போது இன்பநிதிக்கு பாசத்துடன் உதயநிதி செய்த செயல் இணையத்தில் பரவி வருகிறது.