அண்ணாமலை போன்றவர்கள் இதைத்தான் பேசுகிறார்கள்!! பாஜகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Jan 14, 2023, 4:49 PM IST

தஞ்சாவூர் மாவட்டத்தில், பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. இதனை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

இந்த அருங்காட்சியகத்தில்  மிகப்பெரிய பஞ்சவர்ண கிளிகள்,   சிங்கப்பூர் உள்ளிட்ட  20 நாடுகளைச் சேர்ந்த பறவைகளைக் கொண்ட  சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.  பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அப்போது, ‘தஞ்சாவூர் மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் பழைய கலெக்டர் அலுவலகத்தில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. 

இதில் பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த அரிய வகை பறவைகள் அடங்கிய பூங்கா, வண்ண மீன்கள் கண்காட்சி, அரிய வகை பழங்கால சிற்பங்கள் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு அரிய வகை பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பறவைகள் பூங்காவுக்கு செல்லும்போது நமக்கே குழந்தைப் பருவ நினைவுகள் வருகிறது. வெளிநாடுகளில் வாழும் பறவைகள் உள்ளன. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முயற்சியால் இந்த அருங்காட்சியம் உருவாகி உள்ளது. 

பழைய கட்டிடம் பயன்படாமல் இருக்க கூடாது என்பதற்காக அருங்காட்சியகத்தை உருவாக்கி உள்ளார். இதன் மூலம் தஞ்சை நகரில் மேலும் ஒரு சுற்றுலா தளம் உருவாகி உள்ளது.  ஈஷா மையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பான கேள்விக்கு, நேற்றைக்கு  முதல்வர்  சட்டமன்றத்தில்  அதற்கான உரிய பதிலை அளித்துள்ளார்கள். அண்ணாமலை போன்றவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத மாதிரி பேசி வருகிறார்கள். சட்ட ஒழுங்கு வரும் போது எந்தக் கட்சியை பாகுபாடு இல்லாமல் உடனடியாக தவறும் செய்யும்  யாராக இருந்தாலும் அவர்கள் மீது   இதுவரை நடவடிக்கை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சட்ட ஒழுங்கை மீறுபவர்கள் மீது யாராக இருந்தாலும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவோம். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கட்சி பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்  மகேஷ்  பொய்யாமொழி கூறினார்.

இதையும் படிங்க..Pongal 2023 : பொங்கல் தினத்துக்கு இத்தனை நாள் விடுமுறையா? கூடுதலாக 2 நாட்கள் லீவ் கிடைக்குமா?

இதையும் படிங்க..சேது சமுத்திர திட்டத்தால் எந்த பயனும் இல்லை.. யாருக்கு பயன் தெரியுமா? திமுகவை அட்டாக் செய்த அண்ணாமலை