Sep 23, 2019, 5:22 PM IST
தேசிய முற்போக்கு திராவிட கழகம் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகரம் சார்பில் முப்பெரும் விழா ஏழை எளிய மக்களுக்கு நல திட்டம் வழங்கும் விழா நேற்று ஆவடியில் நடைபெற்றது.
அதில் பிரேமலதா விஜயகாந்த் பேசிய போது " பேனர் விழுந்ததை ஒரு விஷயமாக எடுத்து கொண்டு அதை அரசியல் செய்ய பார்த்தவர் தான் எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின்.
ஆனால் இதுவே ஒரு பொது நிகழ்ச்சியோ கோவில் நிகழ்ச்சியோ வைத்திருந்து விழுந்திருந்தால் அதை வைத்து அவர் அரசியல் செய்திருக்க மாட்டார்.
ஏனெனென்றால் இது எதார்த்தமாக நடந்த விஷயம் தான் இன்று தமிழகத்தில் பேனர் இல்லாத நிகழ்ச்சி உண்டா." என்று கூரினார்.