அதிர்ச்சி சிசிடிவி காட்சி..! பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் கடைசி நிமிடங்கள்..

Sep 13, 2019, 4:47 PM IST

சென்னை பள்ளிக்கரணையில் நேற்று அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவிற்காக சாலை முழுவதும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அப்போது,  சாலையில் ஸ்கூட்டரில் சுபஸ்ரீ என்கிற இளம் பெண் வந்தபோது, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனரில் ஒன்று, திடீர் என அவர் மீது விழுந்து. 

பெண் இன்ஜினியர் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.