Aug 21, 2019, 5:16 PM IST
பிரபல நாளிதழின் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா செய்தியாளராக சிவராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இன்று காலை தமிழக முதல்வருக்கு பெருந்துறை அண்ணா சிலை அருகே எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம் வரவேற்பு அளித்தார்.
இந்த நிகழ்வை செய்தி சேகரிக்க சிவராஜ் மற்றும் ஒரு செய்தியாளரும் அவரது இருசக்கர வாகனத்தில் அந்த பகுதியை நோக்கி சென்றார்கள். இந்த விழா நடக்கும் 500 மீட்டர் தூரத்தில் அவரது இருசக்கர வாகனத்தை காவல் பணியில் இருந்த அ.பிரின்ஸ் ராயப்பன் என்ற காவலர் தடுத்து உள்ளார்.
அப்போது நிருபர் சிவராஜ் போட்டோ எடுக்க செல்லவேண்டும் என காவலரிடம் கூறி உள்ளார் அதற்கு அந்த காவலர் எவனாக இருந்தாலும் விட முடியாது என கூறி உள்ளார். அதன் பின்னர் நிருபர் சிவராஜ் வண்டியை ஓரமாக நிறுத்த திருப்பினார்.
அப்போது அந்த காவலர் சொல்ல சொல்ல கேட்காமலாயே போகிறாயாடா என கையால் சிவராஜ் கண்ணத்தில் ஓங்கி அறைந்து கையால் வைத்திருந்த குடையால் சரமாறியாக அவரது முகத்தில் கடுமையாக தாக்கினர் எந்த வித காரணமும் இல்லாமல் நிருபர் என கூறியும் காவலர் ஆவேசமாக தாக்கிய சிசிடிவி காட்சி தற்ப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.