Aug 17, 2019, 2:28 PM IST
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன் என மொத்தம் ஏழு பேர் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். கடந்த மாதம் நளினி தனது மகளுக்கு திருமணம் என்பதால் 30 நாள் பரோலில் வெளிவந்தார்.
வரும் 25ம் தேதியுடன் பரோல் முடிவடைய உள்ளதால் மீண்டும் பரோலை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்க நளினி தரப்பு வழக்கறிஞர் மனு கொடுத்துள்ளார்.