Aug 14, 2019, 6:22 PM IST
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 235 பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 118 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.அதைப்போல் சேலத்துக்கு 60 பேருந்துகளும், மதுரைக்கு ,நெல்லைக்கு தல 14 பேருந்துகளும் ,விழுப்புரத்துக்கு 18 பேருந்துகளும், கும்பகோணத்துக்கு 25பேருந்துகள் மற்றும் கோவைக்கு 16, பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் கழிவறை, படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.பேருந்து பின்னோக்கி வருவதை அறியவும், பயணிகளின் இறங்கும் இடத்தை அறிவிக்கவும், ஒலி எச்சரிக்கை கருவி வசதி உள்ளது.
மாற்று திறனாளிகள் கொண்டு வரும் ஊன்று கோலை பாதுகாப்புக்காக வைக்கவும் வசதி உள்ளது. மின்னணு வழித்தட பலகைகள், தீயணைப்பு கருவிகளும் பேருந்துகளில் அமைக்கப்பட்டுள்ளன.
சுற்றுலா போக்குவரத்து கழக புதிய பேருந்துகளும் தொடங்கி வைக்கப்பட்டன.
இந்த விழாவில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வெல்லமண்டி சீனிவாசன், தலைமை செயலாளர் சண்முகம், போக்குவரத்து துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்