'கதறி கதறி' அழுத்த பெண்கள்.. அசந்து போகும் அளவுக்கு மரியாதை செலுத்திய எடப்பாடி.. வெறிச்சோடி கிடக்கும் போயஸ் கார்டன்..! வீடியோ

Dec 5, 2019, 5:33 PM IST

தமிழத்தில் 6 முறை ஆட்சி செய்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமாக இருந்த ஜெயலலிதாவிற்கு இன்று 3-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இவர் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 5-ம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தார். 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அனுசரித்து வருகின்றனர்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் கருப்பு உடை அணிந்து பேரணியாக வந்து நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என்று பலர் திரளகக  இதில் கலந்து கொண்டனர்.இதனை ஒட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

ஜெயலலிதா தங்கி இருந்த போயஸ் கார்டன் வீட்டுக்கு அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏத்தி மரியாதை செலுத்தினர் அதை பற்றி அவரகள் கூறுகையில்.. 

மேலும் 3 ஆண்டுகள் ஆகியும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது பற்றி, பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டும் அதற்கான உண்மை இன்னும் வெளிவரவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.