அன்று முதல் இன்று வரை.. சர்வதேச நாயகன் நரேந்திர மோடியின் பிறந்தநாள் இன்று..!

Sep 17, 2019, 1:27 PM IST

1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் இந்தியாவின் குஜராத் மாநிலம், மேஹ்சானா மாவட்டத்திலுள்ள “வட்நகர்” என்ற இடத்தில் ‘தாமோதர் தாஸ் முல்சந்த் மோடி என்பவருக்கும், ஹூராபேன்னுக்கும் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில், மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார்நரேந்திர மோடி இவருக்கு ஆறு சகோதரர்கள் உள்ளனர்.

தனது சிறுவயதிலிருந்தே அரசியலில் ஈடுபட வேண்டும் என்று நினைத்த மோடி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்’ அமைப்பின் குழு தலைவர் ஆக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு பல போராட்டங்களில் கலந்து கொண்ட அவர் தன்னை முழுவதும் அரசியலில் நுழைத்துக்கொள்ள முடிவெடுத்தார். 

அதன்படி முழு நேர அரசியல் வாதியாக மாற அவர் பாரதிய ஜனதா கட்சியில் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டார். அவர் தன்னை இணைத்துக்கொண்ட ஒரு ஆண்டிலே அந்த மாநிலத்தின் பொதுச்செயலாளர் ஆனார். 1988 முதல் 1995 வரை அவர் பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வைக்கும் முயற்சிக்கான வரையறைகளை வகுத்து திட்டமிட்டபடி கட்சியின் நிலையினை வலுப்படுத்தினார் . மேலும் தனது அரசியல் வாழ்விலும் நல்ல முன்னேற்றத்தினை அடைந்து கொண்டு வந்தார் மோடி.

 இவரின் அரசியல் பயணத்தினை கட்சியின் மேலிடமும் உற்று கவனித்து வந்தது . மோடியின் வளர்ச்சி ஒரு விதத்தில் அவர்களுக்கு ஆச்சரியத்தினை தந்தாலும்ப அது கட்சியின் பலத்தினை அதிகரிக்கும் என்று அன்றைய பிரதமரான அடல் பிகாரி வாஜிபாய் தேசிய செயலாளர் பதவியினை அளித்தார் . மேலும் 1988 ஆம் ஆண்டு ‘இமாச்சல பிரதேசம்’,’குஜராத்’ ஆகிய மாநிலத்திற்கு தேர்தல் பொறுப்பாளராக அத்வானியால் நியமிக்கப்பட்டார். பிறகு இமாச்சலபிரதேசம்,பஞ்சாப்,ஹரியானா,சண்டிகர்,ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றின் பொது செயலாளர் ஆக நியமிக்கப்பட்டார்.

படிப்படியாக தனது வளர்ச்சியினை தொடந்த மோடி 2001ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த ‘கேசுபாய் பட்டேல்’ ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நடந்த இடைத்தேர்தலில் ‘பாரதிய ஜனதாக் கட்சியின்’ தனிப்பெரும்பான்மை ஆதரவுடன் அக்டோபர் 7, 2001 ஆம் ஆண்டு குஜராத் மாநில முதல்வராக பதவியேற்றார்.

பின்னர் அரசியலில் உச்சம் தொட ஆரம்பித்தார் . அவரின் திறமையான செயல்பாடுகள் மக்களிடம் தொடர்ந்து வரவேற்கப்பட்டது. பிறகு 2007, 2012 என அடுத்த அடுத்த தேர்தல்களில் வெற்றி பெற்று தனது தகுதியினை நிரூபித்தார். ஆக தொடர்ந்து நான்கு முறை குஜராத் மாநில முதல்வராக இருந்துள்ளார்.
தொடர்ந்து நான்கு முறை குஜராத் மக்கள் அவரை தேர்வு செய்தமையால் அவர் மக்களுக்கு சிறந்த தொண்டினை ஆற்றவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதே போல் மற்ற மாநிலங்களை விட குஜராத் சிறந்து இருக்கவேண்டும் என்று நினைத்த மோடி “சோலார் மின் உற்பத்தி” என்ற திட்டத்தின் மூலம் மின்சார உற்பத்தி திறனை அதிகரித்து நாட்டிலேயே குஜராத் மாநிலம் தான் மின் மிகை மாநிலம் என்று அடையாளம் காட்டினார். மேலும் நாட்டின் எதிர்காலம் இன்றைய இளைஞர்களின் கையில் உள்ளது என்பதனை உணர்ந்த மோடி அந்த மாநில கடைகளில் “குட்கா” போன்ற அனைத்து வகையான பாக்கு வகைகளை முற்றிலும் தடை விதித்தது. மேலும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பினை உண்டாகும் யுக்தியோட பல புதிய திட்டங்களை அந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தினார். மேலும் அடிப்படை வசதிகளான தண்ணீர், சாலை, பள்ளிகள், மருத்துவம் , விவசாயம் மற்றும் பெண்பாதுகாப்பு என அனைத்து பிரிவுகளிலும் அவர் சிறப்பான முறையில் பல திட்டங்கலளை அறிமுகப்படுத்தி செயல்படுத்தியும் காட்டினார். மோடியின் ஆளுமைத்திறன் இந்த திட்டங்களின் மூலம் வெளிப்பட்டதுமில்லாமல் அந்த மாநில முன்னற்றத்திற்கு ஒரு படிக்கல்லாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.

2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக தான் வகித்து வந்த குஜராத் முதல்வர் பதவியினை ராஜினாமா செய்த மோடி ‘தேசிய ஜனநாயக கூட்டணி’ மூலம் பிஜேபி மற்றும் இதர கூட்டணி கட்சிகளின் மூலம் பிரதமராகும் பிரகாசமான வாய்ப்பினை பெற்றார். இதற்காக அவர் நாடு முழுவதும் நடந்த மொத்தம் 430 பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் “தேசிய ஜனநாயக கூட்டணி” வெற்றி பெற்றது. இதன் மூலம் மோடி முதல் முறையாகக இந்தியாவின் பிரதமர் ஆனார். அதனை தொடர்ந்து 2019 நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெருமை பெற்று மீண்டும் இரண்டவது முறையகக இந்தியாவின் பிரதமராக 2019 மே 30 ஆம் தேதியன்று பதவியேற்றுக் கொண்டார் இதுவ்ரை இருந்த பிரதமர்கள் அனைவரும் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன் பிறந்தவர்கள். ஆனால், மோடி மட்டும் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பின் பிறந்த பிரதமர் என்ற சிறப்பினையும் பெற்றார்.இன்று பிறந்தநாள் காணும் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஏசியாநெட் நியூஸ் தமிழ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.