அவசரப்பட்ட அதிமுக.. சோலிய கச்சிதமாக முடிச்ச திமுக.. !

Aug 9, 2019, 4:41 PM IST

வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 5ம் தேதி நடந்தது. அதிமுக கூட்டணி வேட்பாளராக ஏசி சண்முகமும் திமுக கூட்டணி வேட்பாளராக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும் களம் கண்டனர். நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சும் போட்டியிட்டார். மொத்தமாக 28 பேர் போட்டியிட்டனர். 

கடந்த ஐந்தாம் தேதி நடந்த வாக்குப்பதிவில், வேலூர் தொகுதியில் மொத்தமுள்ள 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்களில் 10 லட்சத்து 24 ஆயிரத்து 352 பேர் தங்களது வாக்கை பதிவு செய்திருந்தனர். ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வந்தது காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமே  அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்று இருந்தார். பின்னர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். இவ்வாறு இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றதால் கடும் போட்டி நிலவியது. வேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வந்த  நிலையில், அதிமுக ஜெயிப்பதற்கு முன்னாடியே காலை வெற்றி அடைந்தது போல் செம கெத்தாக அதிமுகவினர் கொண்டாட்டத்தை தொடங்கினர். அதேபோல் திமுக தொண்டர்கள் காலை பட்டசாசு இனிப்புடன் காத்து கொண்டு இருந்தனர்  இந்நிலையில் வேலூர் மக்களவை தொகுதியில் சுமார் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது