Nov 25, 2019, 11:19 AM IST
கடந்த வாரம் துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் குருமூர்த்தி நடிகர் ரஜினியை சந்தித்துப் பேசினார். இந்நிலையில் நேற்று திருச்சியில் துக்ளக் பத்திரிக்கையின் விழா நடைபெற்றது. அதில் பேசிய குருமூர்த்தி, பல அதிரடி தகவல்களை தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு அப்போது ஓபிஎஸ் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார், ஆனால் அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்ற பின்னர் தானே முதலமைச்சராக நினைத்தார். அப்போது ஓபிஎஸ்சை கூப்பிட்ட சசிகலா தான் பதவி ஏற்க உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்துக்கு சென்று அது சுத்தமாக இருக்கிறதா ? என பார்த்து வரசொன்னார்.
அப்போது ஓபிஎஸ் நேரடியாக என்னிடம் வந்தார். தனது மனவேதனையை கொட்டினார்.அப்போது நேராக ஜெயலலிதா சமாதிக்கு போய் தியானம் பண்ணுங்கள் என்று சொன்னேன். அதன்படி அவர் செய்தார்.பெரிய மாற்றம் ஏற்பட்டது.
சசிகலா முதலமைச்சராகமல் போனதற்கு நான்தான் காரணம் என்று அதிரடியாக பேசினார். தொடர்ந்து பேசிய அவர், ரஜினிகாந்த் வந்தால்தான் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என்றும் அரசியலுக்கு ரஜினி வரவேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.