Aug 6, 2019, 4:55 PM IST
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியுள்ளதை கொண்டாடும் விதமாக பாட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியினை பாஜகவினர் வெளிப்படுத்தினர்.
இதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நேற்று ஒரு மகிழ்ச்சியான நாள் எனவும், இதனை எதிர்த்த பல கட்சிகள் கூட இன்று அதனை ஏற்றுள்ளது என்றும் கூறினார் அதைப்போல் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த மு.க.ஸ்டாலின் மற்றும் வைகோ ஆகியோருக்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.