கூட்டத்தில் அசந்துபோன தொண்டர்கள்.. மம்தா வரவேற்பு முதல் பொதுக்கூட்டம் வரை..!வீடியோ

Aug 7, 2019, 6:43 PM IST

மறைந்த முன்னாள் முதலமைச்சர்  கருணாநிதி கடந்த ஆண்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு  ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி மறைந்தார்

இந்த நிலையில் இன்றைய தினம் அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காலை 8 மணிக்கு திமுக சார்பில் அமைதி பேரணி  நடைபெற்றது. 

அண்ணா சாலையிலிருந்து புறப்பட்ட அமைதி ஊர்வலம் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்றது.

இந்த அமைதி பேரணியில்  திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமை வகித்தார். இதில் திமுக பொருளாளர் துரைமுருகன், திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, தூத்துக்குடி எம்பி கனிமொழி, நீலகிரி எம்பி ஆ ராசா மற்றும் மத்திய சென்னை mp தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த அமைதி ஊர்வலத்தில் மாநிலம் முழுவதும் இருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர் அதேபோல் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்திற்கு மு.க.அழகிரி சென்றார். அங்கு தனது குடும்பத்தினருடன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இவர்களை தொடர்ந்து வைகோ ,கி வீரமணி ,கவிப்பேரரசு வைரமுத்து  , திமுக நிர்வாகிகள்  , தோழமை கட்சி தலைவர்கள் என அனைவரும் பங்கேற்று   மலர் தூவி அஞ்சலி செல்லுத்திலுள்ளனர்  .  இதனை தொடர்ந்து 
முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி -  கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் -  இன்று மாலை 5 மணி அளவில் --  6.5 அடி உயரத்தில் இருக்கும் கலைஞர் கருணாநிதி சிலையை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திறந்து  வைத்துள்ளார் .  திமுக தலைவர் மு க ஸ்டாலின் ,  புதுவை முதல்வர் நாராயணசாமி ,
திராவிட கலகம  தலைவர்    கி .வீரமணி     உள்ளிட்டோரும் பங்கேற்றனர் .  இதேப்போல சென்னை ராயப்பேட்டை   YMCA  திடலில் மாபெரும் பொதுக்கூட்டம்  நடைபெற்றுவருகிறது  என்பது குறிப்படத்தக்கது  .