Dec 21, 2019, 1:09 PM IST
கேரளா : திருவனந்தபுரத்தின் கிழக்கோட்டையில் ஐயப்ப பக்தர் ஒருவர் தனது சிறுவயது மகனுடன், பத்மனாபசாமி கோவிலுக்கு சென்றுவிட்டு சாலை ஓரத்தில் உள்ள நடைபாதை வழியாக நடந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று ஐயப்ப பக்தரின் கால் நடைபாதை சிலாப்பின் இடையில் சிக்கி, கால் விரல்கள் காயமடைந்து நடக்க முடியால் தரையிலே உட்கார்ந்தார். இதனை மற்றவா்கள் பார்த்துவிட்டு அவரை கடந்து சென்றார்களே தவிர உதவி செய்ய முன்வரவில்லை.
அப்போது அந்த வழியாக தோழிகளுடன் நடந்து சென்ற இஸ்லாமிய பெண் ஒருவர், கடையில் இருந்து தண்ணீர் பாட்டில் ஒன்றை வாங்கி வந்து அந்த ஐயப்ப பக்தாின் காலில் இருந்த ரத்தத்தை கழுவி, மருந்துகடையில் இருந்து மருந்து வாங்கி கட்டு போட்டார்.
இந்த பெண்ணின் மனிதநேய செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.