Sep 4, 2019, 12:39 PM IST
கர்நாடகா மாநிலம் குல்பர்கா என்னும் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில், பெண் ஒருவர் ரயில் நடைமேடையில் இருந்து திடீரென கீழே இறங்கி தண்டவாளத்தை கடக்க சென்றுள்ளார். அப்போது அந்த வழித்தடத்தில் ரயில் ஒன்று வந்துள்ளது.
இதனைப் பார்த்த பயணிகள் உடனே அப்பெண்ணை எச்சரித்துள்ளனர். பின் அந்த பெண் தண்டவாளத்திலேயே உடலை குறுக்கியவாறு படுத்து ரயில் கடக்கும்வரை காத்திருந்து சாதுரியமாக உயிர் தப்பினார். இச்சம்பவம் அங்கு சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.