புதுவையில் மது பாட்டிலுக்கு பட்டையிட்டு பூஜை செய்த ஊழியர்

Oct 6, 2022, 10:30 AM IST

ஆயுத பூஜை விழா புதுச்சேரி முழுவதும்  உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், பணிமனைகள் என  அனைத்திலும் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு மஞ்சள்,  விபூதி,சந்தனம் வைத்து பூஜை செய்து  கொண்டாடபட்ட நிலையில் புதுச்சேரியில் உள்ள ஒரு மதுபான கடையின் கேண்டின் ஊழியர் ஒருவர் மது பாட்டில்களுக்கு விபூதி குங்குமம் பூசி  ஆயுதபூஜை கொண்டாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது..